கோவை: ஆதரவற்ற குழந்தைகளுக்கான விளையாட்டு விழா – நடிகர் ஆரி உரை
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் "பிக் பாஸ்" ஆரி, கல்வியும் விளையாட்டும் இரு கண்கள்; அறிவுக்கு கல்வியும், மன உறுதிக்கு விளையாட்டும் அவசியம் எனக் குழந்தைகளுக்கு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு சமூகம் முழுவதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார். மேலும் மருத்துவர் இராமதாஸ் வாழ்க்கையை மையப்படுத்திய "அய்யா" பையோபிக் செப்டம்பர் இறுதியில் தொடங்கும், அதில் நடிப்பது கூடுதல் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்.
Next Story



