திருவேங்கடம் அருகே விஷ பாம்பு கடித்து பெண் பலி

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கபட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கிருஷ்ணவேணி (56) அங்கு நேற்று இரவு வீட்டின் அருகே புதரில் மறைந்திருந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது.இதனால் வலியில் அவர் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி உயிரிழந்தார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

