திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் காத்திருப்பு போராட்டம்
X
திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் காத்திருப்பு போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் திட்டம் வழங்க கோரியும், 23 மாதகால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க கோரியும் ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெரும் அகவிலைப்படி மருத்துவ காப்பீடு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக, திமுக, என இரண்டு கட்சிகளும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தனர் ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! சென்ற தேர்தலின் போது முதலமைச்சர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார் ஆனால் 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கான வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை, பழைய ஓய்வூதியதிட்டம் கோரி அனைத்து துறை ஊழியர்களும் போராடி வருகின்றனர்! தேர்தல் வாகுறுதிபடி 2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை மறுக்கும் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களையும் மிக மோசமாக வஞ்சிக்கிறது ஓய்வு பெற்ற 23 மாத காலம் ஆகியும் ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story