புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை துவங்கி வைத்த ஆட்சியர்.

X
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 25.08.2025 சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை) சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ள புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, 35 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். உடன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் சி.பன்னீர் செல்வம், தொழிலாளர் நல உதவி ஆணையர் மாதேஷ்வரன், ஐடிஐ கல்லூரி முதல்வர் (பொ) சாமுவேல் அய்யாதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

