சித்தாமூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கல்குவாரி லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் வாகனங்களை முறைப்படுத்தாத அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பாஜகவினர் காவல்துறையிடம் ஒப்படைப்பு செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியிலிருந்து ஜல்லி கற்கள், எம்சண்ட், கருங்கற்கள் உள்ளிட்டவைகளை கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் செய்யூர் வந்தவாசி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கனரக லாரிகளை வரைமுறைப்படுத்தாத அரசு கடித்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது லாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றி சென்றன அப்பொழுது சூனாம்பேடு பகுதியில் இருந்து அதிகளவு கருங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை பாரதிய ஜனதா கட்சியினர் சிறை பிடித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story



