பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

X
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. உடனடி சேர்க்கையில் வாய்ப்பு பெற்ற 16 மாணவ மாணவியர்களுக்கு ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்... சாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த மாணவியின் சான்றிதழ்களை சரி பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பள்ளி படிப்பை முடித்த மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்... மாணவர்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நின்று விடக்கூடாது கட்டாயம் உயர் கல்வியில் சேர்ந்து பயில வேண்டும். அதன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பு பெறும்போது உங்கள் வாழ்வாதாரம் உயரும். உங்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வந்து உடனடி சேர்க்கையிலும் ஈடுபடலாம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தார் உறவினர் நண்பர்கள் என எவரேனும் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி பெறவில்லை எனில் உடனடியாக உயர் கல்வியில் இணைய அறிவுறுத்த வேண்டும். இதை நீங்கள் ஒரு சமூக சேவையாக செய்ய வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மட்டுமல்லாமல் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு பயின்றவர்கள் கூட தொழில்நுட்ப பயிற்சி பெற இயலும். எனவே பள்ளி படிப்புடன் நின்று விடாமல் கட்டாயம் உயர் கல்வி பயில வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்தார்.... மேலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இதுவரை உயர்கல்வியில் சேர இயலாது, இந்நிகழ்ச்சியில் உடனடி சேர்க்கையில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 9 அறிவியல் மற்றும் கலை கல்லூரி, 5 பாலிடெக்னிக் கல்லூரி , 2 ஐ டி ஐ என மொத்தமாக 16 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி நிறுவனங்கள் அமைத்திருந்த அரங்கங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது சாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த மாணவியின் சான்றிதழ்களை பார்வையிட்டு , அந்த மாணவி வேற்று மாவட்டத்தில் இருந்து மாறுதல் பெற்றுள்ளதால் சான்றிதழ் பெற இயலவில்லை என அறிந்து அம் மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.
Next Story

