ராமநாதபுரம் இட ஒதுக்கீடு வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோகுல மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று

X
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் யாதவ சமூதாயத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிட கோரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோகுல மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று பேரணியாக சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் பரந்து விரிந்துள்ள யாதவ சமூதாயத்திற்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிட கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோகுல மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் தங்கவேல்,மாவட்டத்தலைவர் முருகானந்தம் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு யாதவர்களில் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிட கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அங்கிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story

