அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளை துவக்கம்

X
ஏழை எளிய கிராமப்புற நகர்ப்புற மாணவ மாணவிகள்பள்ளிக்கு வரும் அவசரத்தில் காலை உணவு உண்ணாமல் வரும் நிலையை அறிந்து பெற்றோர்களும் அவதிப்படும் நிலையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி தொடங்கி வைத்து நடத்தி வருகிறார் முதலில் ஊராட்சி பகுதிகளில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் நகரப் பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என தமிழ்நாடுமுதல்வர் அறிவித்துள்ளார் அதன்படி நாளை காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது அதன்படி திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, குமரன் கல்வி நிலையம், சாலப்பாளையத்தில் உள்ள கலைமகள் கல்வி நிலையம், சிஎச்பி காலனியில் உள்ள மகாதேவ வித்யாலயம் நடு நிலைபள்ளி, ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள மகாதேவி வித்யாலயா துவக்கப்பள்ளி, செங்குந்தர் கல்வி நிலையம், சிறுமலர் பள்ளி, ஔவைக்கல்வி நிலையம் என அரசு உதவி பெறும் ஏழு பள்ளிகளில் பயிலும் 457 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள்பரமத்தி சட்டமன்ற உறுப்பினர்கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர்கார்த்திகேயன் மற்றும் இருபால் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளர்உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர் துவக்க விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வெளியிட்ட செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

