மாவட்ட அளவிலான கபடி போட்டி

மாவட்ட அளவிலான கபடி போட்டி
X
நிலக்கோட்டையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி திண்டுக்கல் கல்லூரி அணி கோப்பையை கைப்பற்றியது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1977 ஆம் ஆண்டு நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர், சின்னாளப்பட்டி, பள்ளப்பட்டி, ஆவாரம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதியில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றனர் முன்னதாக போட்டிகளை நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சத்திய பிரபா தொடங்கி வைத்தார் பகல் இரவு ஆட்டங்களாக நாக் அவுட் முறையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டியில் நிலக்கோட்டை புதுப்பட்டி கபடி கழக அணியும் திண்டுக்கல் ஸ்ரீ.வி கல்லூரி கபடி கழக அணியின் மோதின விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 17-6 என்ற புள்ளி வித்தியாசத்தில் திண்டுக்கல் கல்லூரி கபடி கழக அணி கோப்பையை கைப்பற்றியது இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் நிலக்கோட்டை முன்னாள் மாணவர்களின் ஒருவரான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் கண்ணன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பணம் பரிசுகளை வழங்கினார் கபடி போட்டிகளை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
Next Story