தேமுதிக வடக்கு மாவட்டம் ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்...

தேமுதிக வடக்கு மாவட்டம் ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்...
X
தேமுதிக வடக்கு மாவட்டம் ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த நாளை அனைத்து பகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் அ. இளையராஜா, தலைமையில், வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய சரவணன் முன்னிலையில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், மற்றும் புதிய பஸ்நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய சரவணன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணியார் பிரேமலதா அவர்கள் ஆணைப்படி அனைத்து பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் இன்று பொது மக்களுக்கு அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். மேலும் அது மட்டும் இல்லாமல் கேப்டன் அவர்கள் ஆசை பொதுமக்களுக்கு உணவு அளிப்பது அந்த வகையில் தொடர்ந்து கேப்டன் அவர்களின் ஆலயத்திலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அன்னதானம் வழங்கி வருகின்றோம். அதேபோல் அவரின் பிறந்தநாள் ஆன இன்றும் பொதுமக்கள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மாவட்ட முழுவதும் ஏராளமானோர்க்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறோம். இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கே என்ற கேப்டன் அவர்களின் ஆணையை இன்றும் தொடர்ந்து செய்து வருகிறோம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்டத் துணைச் செயலாளர் பாலச்சந்தர், ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, நகர பொருளாளர் நடராஜன், மற்றும் மாயகிருஷ்ணன், வெங்கடேஷ், முருகன், குண்டு செல்வம், 14-வது வார்டு செயலாளர் ஓ.புலிராஜ், 17-வது வார்டு செயலாளர் ராஜ்குமார், 24 ஆவது வார்டு செயலாளர் சிவக்குமார், மேலும் ராசிபுரம் வார்டு கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story