கோவையில் மாணவர் விடுதிகளில் போலீஸ் அதிரடி சோதனை !

கோவை மாவட்டத்தில் மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகள் மற்றும் தனியார் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சமீபத்தில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் மாணவர்களுக்கு தொடர்புடைய கும்பல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. கருமத்தம்பட்டி, பேரூர், கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 90 குழுக்களாக பிரிந்து மொத்தம் 412 போலீசார் மாணவர் விடுதிகள், வீடுகள், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் காலை 5 மணி முதல் 10 மணி வரை சோதனை செய்தனர். மாணவர்களின் அடையாள அட்டைகள், வாகன ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதுடன், சில இடங்களில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் மாணவர் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
Next Story

