தமிழ்நாட்டில் வரி விதிப்பு குறைவாகவே உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு !
கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செம்மொழி பூங்கா பணிகளை விரைவில் நிறைவு செய்ய ரூ.50 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் புதிய மாணவர் விடுதி, வகுப்பறைகள் திறப்பு, சர்வதேச ஹாக்கி மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உக்கடம் பேருந்து நிலைய மேம்பாடு போன்ற பணிகள் பார்வையிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ரூ.69.20 கோடி மதிப்பில் இயற்கை எரிவாயு மையம் மற்றும் கோவையில் ரூ.250 கோடி மதிப்பில் வெஸ்ட்-டு-எனர்ஜி திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும் கூறினார். வரி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தமிழ்நாட்டில் வரி விதிப்பு மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவானது. மகாராஷ்டிராவில் 14,000 விதிகள் இருந்தால், தமிழ்நாட்டில் 2,000 மட்டுமே உள்ளன. 600 சதுர அடிக்கு கீழ் வீடுகளுக்கு எந்த மாற்றமும் இல்லை; மேலுள்ள இடங்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சொத்து வரி அல்லது குப்பை வரி எதுவும் விதிக்கப்படவில்லை. எங்காவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story



