விநாயகர் சிலை வைப்போருக்கு ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலை வைப்போருக்கு  ஆலோசனை கூட்டம்
X
விநாயகர் சிலை வைப்போருக்கான ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சிலை வைப்போருக்கான ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் கூறியதாவது: வைக்கக்கூடிய விநாயகர் சிலை 10 அடி வரைதான் இருக்க வேண்டும். பிளாஸ் ஆப் பாரிஸ் இல் செய்த சிலையாக இருக்க கூடாது. எளிதில் நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்காமல், பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கி வைக்க வேண்டும். எளிதில் தீப்பற்ற கூடிய பந்தல் அமைக்காமல், தகர கொட்டகை அமைத்து சிலை வைக்க வேண்டும். சிலை வைக்கும் குழுவினர் 5 பேர் கொண்ட குழு அமைத்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாக்க வேண்டும். சிலைகளை விநாயகர் சதுர்த்தி நாளன ஆக. 27ல் வைத்து, ஆக. 29ல், குமாரபாளையம் காவிரி ஆற்றில், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காவிரி படித்துறையில் கரைக்க வேண்டும். கோவில்கள், பள்ளிகள், பள்ளி வாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அருகில் விநாயகர் சிலை வைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story