விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்

விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்
X
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். நகரில் பல இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நாராயண நகர், புத்தர் தெரு ஓலப்பாளையம் பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் 500 நபர்களுக்கு நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயண சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், நகர அவைத்தலைவர் ரவி, நகர மகளிரணி துணை செயலர் சத்யா, இலைகன்ர் அணி செயலர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story