கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள மனநலம் குன்றியோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம்..

X
Rasipuram King 24x7 |25 Aug 2025 8:29 PM ISTகேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள மனநலம் குன்றியோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம்..
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் உள்ள அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள மனநலம் குன்றியோர் மற்றும் முதியோர்களுக்கு ராசிபுரம் தேமுதிக நகர கழக செயலாளர் அ.இளையராஜா, தலைமையில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய சரவணன் முன்னிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர தொண்டன் ராஜா ஏற்பாட்டில் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்புகள், மற்றும் பல்வேறு கலவை சாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உணவு பெற்று கொண்ட அனைவரும் மற்றும் நிர்வாகிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். மேலும் கேப்டன் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு அவரின் படத்தை அன்பளிப்பாக அனைவரின் சார்பாகவும் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் விஜய சரவணன், நகர கழக செயலாளர் இளையராஜா, விஜயகாந்த் தொண்டர்கள் ராஜா, செந்தில், மணிகண்டன், ஐயப்பன், தமிழரசன், பன்னீர், ரஞ்சித், செல்வா, மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் பாலச்சந்தர், நகர பொருளாளர் நடராஜன், மாயக்கண்ணன், வெங்கடேஷ், முருகன், குண்டு செல்வம், 14வது வார்டு செயலாளர் ஓ புலி ராஜ், 17 வது வார்டு செயலாளர் ராஜ்குமார், 24 வது வார்டு செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story
