கோவை அருகே வனத் துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை – உயிர் தப்பிய வனத்துறை ஊழியர்கள்

கோவை அருகே வனத் துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை – உயிர் தப்பிய வனத்துறை ஊழியர்கள்
X
கோவை தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று வனத் துறை ஜீப்பை ஆவேசமாக தாக்கியது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று வனத் துறை ஜீப்பை ஆவேசமாக தாக்கியது. இரவு நேரங்களில் அப்பகுதியில் முகாமிட்டு நிலங்களை சேதப்படுத்திய யானையை, போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள் அதிகாலையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்டிச் சென்றனர். அப்போது, யானை திடீரென வாகனத்தை நோக்கி ஓடி வந்து முன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. உடனே வாகனத்தை பின்னே எடுத்துச் சென்று வனத்துறை ஊழியர்கள் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Next Story