கோவையில் தெருநாய்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பேரணி !
நாடு முழுவதும் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் ஆர்வலர்கள் தெருநாய்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, “தெரு நாய்களை பாதுகாப்போம் – தடுப்பூசி, கருத்தடை அவசியம்” எனும் வாசகங்களுடன் முழக்கமிட்டனர். பேரணியில், உச்சநீதிமன்றம் கூறியபடி தெருநாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்த பிறகு மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்வலர்கள் பேட்டியளித்தபோது, நாய் கடித்தாலே அவை தெருநாய் என்றில்லை, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் கருத்தடை செய்யாமல் இருந்தால் கடிக்கும் வாய்ப்பு உண்டு என்றனர். மேலும், நாய் கடிப்புகளில் வீட்டு நாயா, தெருநாயா என அரசாங்கம் தனித்த புள்ளிவிவரம் வெளியிட வேண்டும் என்றும் கோரினர்.
Next Story



