பேராவூரணி நகரில் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, பட்டுக்கோட்டை சாலை முதல் புதிய பேருந்து நிலையம் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில், இருபுறமும் மின்விளக்கு அமைப்பதற்கான துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். திமுக மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜா, திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக இளைஞர் அணி நகர அமைப்பாளர் பிரவீன் ஆனந்த், நகர வர்த்தகர் கழக செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

