மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணி

மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணி
X
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக ”மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டம்” திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் காந்தி மார்கெட், வார்டு எண்-13, சின்னாளபட்டி பூங்சோலை, சின்னாளப்பட்டி வார்டு எண்-14, உண்ணிச்செட்டியூர் பிரதான சாலை, ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட், பேருந்து நிலையம், மேலும், நிலக்கோட்டை மற்றம் வத்தலக்குண்டு மார்கெட் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாசுகட்டுபாடு செயற்பொறியாளர் குனசேகரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், மாநகராட்சி சுகாதார அலுவலர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story