கராத்தே ஆசிரியர் வீட்டில் நாகப்பாம்பு பிடிபட்டது

X
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயகருணன் (48). இவர் கராத்தே ஆசிரியர். நேற்று இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் பகுதியில் 7 அடி நீளம் உடைய நாகப்பாம்பு ஒன்று காணப்பட்டது. உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அலுவலர் ஜெகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி நாகப் பாம்பை பிடித்தனர். பாம்பை பிடிக்கும் போது அது ஆக்ரோஷத்துடன் சீறி படம் எடுத்து ஆடியது. பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் அடர்ந்த வன பகுதியில் கொண்டு விட்டனர்.
Next Story

