வேளாண் உழவர் நலத்துறை திட்ட நிகழ்ச்சி

X
தியாகதுருகம் வேளாண்துறை சார்பில் இறைஞ்சி கிராமத்தில் நடந்த உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்ட நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் சந்திரமோகன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரஞ்சிதா முன்னிலை வகித்தனர். துணை வேளாண் அலுவலர் சிவனேசன் வரவேற்றார். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், மானிய விபரங்கள், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோளம் விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் விளக்கினார்.
Next Story

