சிஐடியூ சார்பில் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம்.

மதுரை மேலூரில் சிஐடியூ சார்பில் மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
மதுரை மேலூரில் புறநகர் மாவட்ட சிஐடியு சார்பில் 11 வது மாநாடு நேற்று (ஆக.25) நடைபெற்றது. மாநாட்டில் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றபேரணியை தொடர்ந்து மேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்திற்கு சேகர் தலைமை வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். உடன் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story