காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாநகரில் விநாயகர் சிலைகள் அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் , மதுரை நான்கு மாசி வீதி & திருப்பரங்குன்றம் பகுதிகளில் நடைபெற இருக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலைகளை கரைக்கும் ஆற்றுப்பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டமானது, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் (தெற்கு, வடக்கு, போக்குவரத்து மற்றும் தலைமையிடம்), உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story