மன்னார்குடியில் இளைஞர் தற்கொலை

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுதெருவை சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சூர்யா.இவர் வெளிநாடு சென்று வந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து பயணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவராக வேலை பார்த்து வந்தார். இதனால் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தோர் சூர்யாவை நம்பி பணம் கொடுத்து இருந்த நிலையில் சூர்யாவால் பயணிகளை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப முடியவில்லை வாங்கிய பணத்தையும் சூரியாவால் திரும்ப தரவில்லை இதனால் கடன் கொடுத்தவர்கள் சூர்யாவிடம் அடிக்கடி பணம் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த மன்னார்குடி நகர காவல் துறையினர் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

