தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த திமுக பிரமுகர்

மன்னார்குடி அருகே ஐந்து சவரன் தங்க நகையோடு சாலையில் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக பிரமுகரை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவர் கடந்த 21 ஆம் தேதி வல்லூர் கிராமத்தில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.அங்கு சென்று பார்த்த போது அவர் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது.இது குறித்து சந்தானலட்சுமி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் முத்துவேல் துலசேந்திரபுரம் சாலையில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.சந்தான லட்சுமி தவறவிட்ட கைப்பையில் 5 சவரன் தங்க நகை, வெள்ளி அரைஞாண்கயிறு 250 ரூபாய் பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது. இந்நிலையில் இன்று சந்தான லட்சுமியிடம் கையை ஒப்படைத்தனர்.
Next Story