பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஒருவர் கைது, இருவர் தப்பி ஓட்டம்

X
அச்சிறுபாக்கம் அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம். செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சியில் இன்று காலை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் திருடர்களை விரட்டி பிடிக்கும் போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த மூவரில் ஒருவர் சிக்கிக்கொண்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அச்சரப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
Next Story

