கரூர் -கள்ளக்காதல் விவகாரம்- திடீர் சாலை மறியலால் பரபரப்பு.
கரூர் -கள்ளக்காதல் விவகாரம்- திடீர் சாலை மறியலால் பரபரப்பு. கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் உள்ள புதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்.கொத்தனார்,இரது மனைவி ஜனனி. இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் மாயனூர் பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை மணிகண்டன் காதலித்து பழகி வந்துள்ளார்.இந்த கள்ளக்காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மணிகண்டன் தனது காதலியுடன் தலைமறைவானார்.இதனால் இரு தரப்பினரும் லாலப்பேட்டை & மாயனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் மாயனூர் போலீசார் மணிகண்டன் அவரது காதலியையும் கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணைக்கு பிறகு இருவரையும் பிரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது வீட்டிலிருந்து இரவு நேரத்தில் கிளம்பி சென்றுள்ளார்.இரவு 2- மணி அளவில் கள்ள காதலி வீட்டருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் மணிகண்டனின் பிரதேத்தை கைப்பற்றி தற்கொலை என வழக்கு பதிவு செய்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி அருகே மணிகண்டன் - ஜனனி உறவினர்கள் மணிகண்டன் கள்ளக்காதலி உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர்- திருச்சி சாலையில் நேற்று மாலை அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் சமாதானம் செய்தும் கேட்காமல் மது அருந்திய நிலையில் போராட்டம் நடத்தியதால் அனைவரையும் குண்டு கட்டாக போலீசார் வேனில் ஏற்றினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story





