வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

வீட்டு படியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
X
குளத்தூரில் வீட்டு படியில் தவறி விழுந்து காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுலோச்சனா என்ற மனைவி, சுபமாலினி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலையில் வீட்டிலிருந்த முத்துக்குமார் மனைவியிடம் தலைசுற்றுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீட்டிலிருந்த படிக்கட்டில் ஏறியபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் குளத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story