'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் தொடங்கி வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை  ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் தொடங்கி வைத்தார்.
X
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மேல்குப்பம், பாப்பனப்பள்ளி, வடச்சேரி ஆகிய ஊராட்சி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்குப்பம், பாப்பனப்பள்ளி, வடச்சேரி ஆகிய ஊராட்சி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வடச்சேரி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) சுரேஷ் குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி வில்வநாதன் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்து முகாமை பார்வையிட்டார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்சார துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 14 பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பெற்று, அந்தந்த துறைகளுக்கு தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட மனுக்களில் மின் பெயர் மாற்றம் மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ் வழங்கினர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்திமதி குமார்(மேல் கப்பம்), அனிதா பாபு (வடச்சேரி), பூபதி (பாப்பனப்பள்ளி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story