தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது...

தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான  சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது...
X
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது...
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது... சிவகாசி பகுதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் 16 பேர் அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற 120 பேர்களில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் 16- பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மற்றும் எடைப் பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டிகளில் தொடு முறையுடன், ஒற்றை மற்றும் இரட்டைக் கம்பு விளையாட்டு, சுருள்வாள் மற்றும் வாள்வீச்சு, சக்கர பானத்துடன் அலங்கார சிலம்பம் சுழற்றுதல் முறையில் விளையாடி 10- தங்கம் மற்றும் 6- வெள்ளிப் பதக்கங்களுடன், வெற்றிக் கோப்பைகளோடு, சான்றிதழ்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்த வெற்றியின் மூலமாக 2026 -ம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்து கொள்ள 16 பேரும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்டி:- நந்தகுமார், சாதனை மாணவர்- சிவகாசி.
Next Story