சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
X
சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் திமுக அரசு எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறது எனவும் சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருதுகிறது என விமர்சனம் செய்தார். மேலும் இந்திய குடியுரிமை உள்ள எந்த வாக்காளர்களின் உரிமைகளும் பறிக்கப்படக்கூடாது என்றார். மேலும் வாக்காளர்களாக தகுதியற்றவர்கள் போலியான பெயர்களிலோ அல்லது இரண்டு முதல் நான்கு இடங்களில் வாக்குகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்றார். மேலும் போலி வாக்காளர்கள் விவகாரம் எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றார். மேலும் பேசிய கிருஷ்ணசாமி பிரதமரே தனக்கு எதிரான சட்டத்தை இயற்றி உள்ளார் என்பதை எப்படி தவறாக சொல்ல முடியும் என்றார். மேலும் அண்மை காலங்களாக ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு தான் முறைகேடுகள் நடக்கிறது. சாதாரணமாக உள்ளாட்சி அமைப்புகளான மேலிருந்து கீழ் வரையிலும் தலையாரி முதல் தலைமைச் செயலாளர் வரை ஊழல் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டனர் என்றார். மேலும் ஊழல் தான் தவறு செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கி கொள்கின்றனர் எனவும் ஊழல் தான் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது என்றார். மேலும் ஊழல்களால் தான் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. அரசின் எந்த சலுகைகளும் பலன்களும் அடிமட்ட மக்களுக்கு சென்று சேர்வதில்லை எனவும் ஊழலை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிய வேண்டும் என்றார். அதனுடைய துவக்கமாகத்தான் 30-நாட்களுக்குள் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படும் பிரதமர் மற்றும் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பதவி பறிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது எனவும் அதே நேரத்தில் அனைவரும் இந்த மசோதாவை வரவேற்க வேண்டும் என்றார் இதன் மூலமாக ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியுள்ளது எனவும் இதனால் அரசியல் கட்சி தலைவர் களுக்கு கொஞ்சமாவது பயம் வரும் என தெரிவித்தார்.
Next Story