ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கும் அனுமதிக்க கூடாது

X
கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை குமரி உட்பட தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் அனுமதிக்க கூடாது என அரசை வலியுறுத்துகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் திட்டத்தை நிறுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு ஒன்றிய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 20-1-2020 அன்று சட்டசபையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலத்திற்கான ஒரு தனி சட்டத்தை தனி தீர்மானமாக அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் அறிமுகம் செய்தார். இது மாநில அரசிதழில் முறைப்படி வெளியிடப்பட்டது. எனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குமரி ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

