அரசு காலணி -நடந்து சென்ற வட மாநில இளைஞர் மீது டூவீலர் மோதி விபத்து.

அரசு காலணி -நடந்து சென்ற வட மாநில இளைஞர் மீது டூவீலர் மோதி விபத்து.
அரசு காலணி -நடந்து சென்ற வட மாநில இளைஞர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் தொழில்பேட்டை அருகே முத்தையா செட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 32. இவரிடம் சத்தீஸ்கரை சேர்ந்த சந்தார் வயது 25 என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் வாங்கல்-கரூர் சாலையில் அரசு காலனி அருகே நடந்து சென்றபோது கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த லட்சுமணன் வயது 51 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் சந்தார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்தாரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பிரபாகரன் அளித்த புகாரில் வெங்கமேடு காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story