பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது

பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது
X
தனியார் பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பொருட்கள் குறித்த கண்காட்சி நடந்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அருகே தனியார் பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுமார் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையான அரசர் காலத்து நாணயங்கள், சேர சோழ பாண்டியர் கால நாணயங்கள், மைசூர் நாணயம், மதுரை நாயக்கர் திப்பு சுல்தான் காலத்து செம்பு நாணயங்கள் ,ஒரு பைசா ,இரண்டு பைசா, அஞ்சு பைசா, பத்து பைசா உள்ளிட்ட நாணயங்களும் மாணவ மாணவியரின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்க டாலர், நைஜீரியா நாட்டின் நயரியா நாணயம், பங்களாதேஷ் நாட்டின் டாக்கா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது . இதன் ஒரு பகுதியாக பண்டைய கால போர் கருவிகள், பழங்காலத்தில் பயன்படுத்திய ஆபரணங்கள் ,பெண்கள் பயன்படுத்திய சிலம்பு, ஆங்கிலேயர் காலத்திய வானொலி தபால் அட்டைகள் ,தொலைபேசி ,இசைக்கருவிகள், பீரங்கி குண்டுகள், விளக்குகள் ,பண்டைய கால கடிகாரம் ,இரும்பு பெட்டி,சிற்றரசர்கள் பயன்படுத்திய வாள்,பழங்கால கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்களை பார்வைக்காக வைத்திருந்தனர். இதனை மாணவ மாணவியர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து பழங்கால பொருட்கள் குறித்து மாணவ மாணவியர் எழுப்பிய கேள்விகளுக்கு பழங்கால நாணய சேகரிப்பாளர் தாமரை ராஜ் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார்.
Next Story