சென்னையிலிருந்து,தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர்

X
அரியலூர், ஆக.26 சென்னையிலிருந்து,மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள், மாண்புமிகு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில்,காணொளி காட்சி வாயிலாகத் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் 1330 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி, மாணவச் செல்வங்களுடன் காலை உணவு சாப்பிட்டார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் அசோக்குமார்,நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார்,துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி,பள்ளி ஆய்வாளர் செல்வகுமார்,வட்டார கல்வி அலுவலர் நடராஜன்,பள்ளி தாளாளர் அருட்சகோதரி பவுலின் மேரி,தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஸ்டெல்லா மேரி,நகர்மன்ற உறுப்பினர்கள் துர்கா ஆனந்த்,கிருபாநிதி மற்றும் இருபால் ஆசிரியர்கள்,கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

