கார், டூவீலர் மோதிய விபத்தில் விவசாயி பலி

X
Komarapalayam King 24x7 |26 Aug 2025 5:35 PM ISTகுமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, 75. விவசாயி. இவர் நேற்று காலை 07:30 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில் நாச்சிமுத்து தோட்டம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, அதே திசையில், அவருக்கு பின்னால் வந்த சுசுகி கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து, பழனிசாமியின் மகன் பெரியசாமி, 48, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பெங்களூரை சேர்ந்த கால் பந்து பயற்சியாளர் ராகேஷ், 43, என்பவரை கைது செய்தனர்.
Next Story
