இரவாங்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

X
அரியலூர், ஆக.26- ஜெயங்கொண்டம் ஊராட்சிக்குட்பட்ட இறவாங்குடி கிராமத்தில் நடைபெற்று வரும், உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை,மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசமி ,மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா ,ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள் தணிக்கை) பழனிச்சாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் R.ஷீஜா, வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வ.ஊ),சந்தானம் (கி.ஊ), ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் இரா.மணிமாறன்,கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நா.கணேசன் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள்,ஜெயங்கொண்டம் கிழக்கு,மத்திய ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

