பரமத்தி வேலூர் அரசு பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.

X
Paramathi Velur King 24x7 |26 Aug 2025 6:41 PM ISTபரமத்தி வேலூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் கே.எஸ் மூர்த்தி பங்கேற்று துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர், ஆக.26: தமிழகம் முழுவதும் இன்று பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சியில் காலை உணவு திட்டத்தை முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வேலூர் பேரூர் தி.மு.க.செயலாளர் முருகன் முருகன் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன்,பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, மோகனூர் ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர் ஆகியோர் வகித்தனர். பரமத்தி வேலூர் பேரூர் அவைத்தலைவர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க .பொறுப்பாளரும் கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு சுந்தசாமி கண்டர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் 95 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு உணவை ஊட்டி விட்டு அவரும் சாப்பிட்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன்,மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண்,நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், பாலகிருஷ்ணன்,பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா,மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
