இராசிபுரத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..

X
Rasipuram King 24x7 |26 Aug 2025 6:56 PM ISTஇராசிபுரத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாநில அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.. தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5- ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா (26.8.2025) நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தூய இருதய அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன், அப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின்கீழ் உணவுகளை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி, இராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி முனைவர்.ஆர். கவிதா சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ப. மகேஸ்வரி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு மாநில ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மாணவ மாணவிகள் உள்பட, சுமார் 18 இலட்சம் மாணாக்கர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது 3-வது கட்டமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2.50 இலட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2022 செப்டம்பர் 16-ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் 25 அன்று ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி நகரப்புற பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2024 ஜூலை 15 அன்று ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, தமிழகத்தில் 3-வது கட்டமாக இன்று (26.8.2025), முதலமைச்சரின் காலை உணவு திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3-வது கட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் உள்ள 29 பள்ளிகளைச் சேர்ந்த 2,531 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். ஒட்டு மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் ஊரகம், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய பகுதிகளில் மொத்தம் உள்ள 914 பள்ளிகளில் 39,435 மாணவ-மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர் என்றும் அமைச்சர் மா. மதிவேந்தன் தெரிவித்தார். இன்று, நாமக்கல் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் உள்ள 29 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,531 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
Next Story
