காலை உணவு விரிவாக்கத் திட்டம் துவக்கம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் திருவள்ளுவர் நிதியுதவி துவக்கப் பள்ளியில் இன்று (ஆக.26) தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் டி.எஸ்.சௌந்தரராஜன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story

