ராசிபுரத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட முன்னாள் காவல் உதவியாளரை கடித்த தெரு நாய். சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...

ராசிபுரத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட முன்னாள் காவல் உதவியாளரை கடித்த தெரு நாய். சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...
X
ராசிபுரத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட முன்னாள் காவல் உதவியாளரை கடித்த தெரு நாய். சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பில் ராஜ்(60) இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி கடந்த மாதம் முன்பு ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வருகிறார். இந்த நிலையில் அன்பில் ராஜ் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்துக் கொண்டு வந்த நிலையில் இன்று வழக்கம் போல் அன்பில் ராஜ் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து முத்துகாளிப்பட்டி பகுதி வரை நடை பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அப்போது கோரைக்காடு அருகே நடை பயணத்தில் ஈடுபட்டு இருந்தபோது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் முதலுதவி சிகிச்சைக்காக ராசிபுரம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராசிபுரம் நகர வங்கி தெரு பகுதியில் ஒரு சிறுவனை நாய் துரத்தி கடித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story