ஆபத்தான நிலையில் வடிகால் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

X
தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் உள்ள வடிகாலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பிரதான சாலைகளுள்ன ஒன்றான போல்பேட்டை பெரிசன் பிளாசா திரும்பும் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்னர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

