கோவை கே.ஜி. மருத்துவமனையில் இருந்து ராயல் கேர் மருத்துவமனைக்கு இதயம் எட்டு நிமிடத்தில் கொண்டு சென்று சிறுவனுக்கு பொருத்தம்

X
கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்டு, அவசரமாக சிகிச்சை தேவைப்பட்ட சிறுவனுக்கு பொருத்துவதற்காக ராயல் கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயத்தை விரைவாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் நடவடிக்கையாக கோவை அவிநாசி சாலையில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. வெறும் எட்டு நிமிடங்களில் இதயம் ராயல் கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் போலீசாரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த அவசர உயிர்காக்கும் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

