கோவை ரோந்து காவலர்களுக்கு ஸ்மார்ட்போனும் தனிப்பட்ட எண்களும் வழங்கல்!

X
கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ரோந்து பீட் காவலர்களுக்கு ஸ்மார்ட்போன்களும் பிரத்தியேக தொலைபேசி எண்களும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆணையாளர் சரவண சுந்தர் ஓன்று கூறியதாவது, ஜனவரி முதல் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இப்போது அவர்களுக்கு தனிப்பட்ட எண்கள் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் 100-க்கு அழைத்தால் புகார் நேரடியாக சம்பந்தப்பட்ட பீட் காவலரிடம் சேரும். மேலும், QR கோடு மூலம் அவர்களின் எண்களை அறிந்து கொள்ளலாம்.போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாய்பாபா காலனி மேம்பாலம் முடிந்தவுடன் அப்பகுதியில் நெரிசல் குறையும். விநாயகர் சதுர்த்திக்காக 1,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிவிரைவு படை மற்றும் BSF படையணிகளும் வரவுள்ளன. மாநகரத்தில் 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே உள்ள கேமராக்களும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளன. சுழற்சி முறையால் காவலர்களுக்கு கூடுதல் பளு இல்லை என்றும், வயதானவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story

