பேராவூரணி அருகே காலை உணவுத் திட்டம் துவக்கம்

காலை உணவுத் திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி பகுதியில் 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில், 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பயிலும் 45 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.  இதில், வட்டார கல்வி அலுவலர் க.கலா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், சாமிநாதன், திமுக மாவட்ட அவை தலைவர் சுப.சேகர், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத்,  பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமரகுரு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேத.கரம்சந்த் காந்தி, கிளை செயலாளர் அண்ணாதுரை, கிராம செயலாளர் வில்சன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பள்ளி தாளாளர் அருள் திரு ஆரோக்கியசாமி துரை வரவேற்றார். நிறைவாக, தலைமை ஆசிரியர் அமலா நன்றி கூறினார்.
Next Story