போக்சோ குற்றவாளி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

X
பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போக்சோ குற்றவாளி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் . இவர் கடந்த 2023ம் ஆண்டு 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் 9 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவன் ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் பள்ளி இடை நின்றனர். பள்ளிக்கு செல்லாதது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சென்று சிறுமி, சிறுவனிடம் நடத்திய நேரடி விசாரணையில், ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரிடமிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ளும் பொருட்டு நாங்கள் ஊருக்குள் வரவில்லை என்பதால் பள்ளிக்கு வரவில்லை என கூறியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டோரின் தாயார் கொடுத்த புகாரினபேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்த் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் ஆனந்த் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றங்கள் நிருப்பிக்கபட்டது. இதையடுத்து நீதிபதி இந்திராணி இந்த வழக்கினை விசாரித்து சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்த குற்றவாளி என அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி ஆனந்த் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி பாத்ரூமிற்கு சென்று விட்டு பின்னர் கோர்ட்டுக்கு வந்த போது ஆனந்த் மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது தான் ஆனந்த் தான் விஷம் அருந்திவிட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்த் சிசிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த வழக்கின் தீர்ப்பை 3 நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போக்சோ குற்றவாளி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

