கல்லூரியில் தேர்வுக்கான பயிற்சி தொடக்க விழா

X
கல்லூரியில் தேர்வுக்கான பயிற்சி தொடக்க விழா பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரியில் யுஜிசி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முனைவர் மு. முத்துமாறன் கலந்து கொண்டார். நிகழ்வில் கல்லூரியின் மொழிப்புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சே. சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் ராஜலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
Next Story

