கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் தலைவியாக செயல்பட்டு வரும் இவா் குழு பணிக்காக குமந்தாபுரம் வடக்கு விளை தெரு வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது தெரு நாய் விரட்டியதில் அவா் நிலை தடுமாறியதால் ஸ்கூட்டா் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில், கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Next Story

