பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  பத்மநாபபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வருடம் தோறும் கேரள மக்களின் முக்கிய விழாவான ஒணப் பண்டிகை  விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று அரண்மனையின் முகப்பு பகுதியில் வண்ண வண்ண மலர்களுடன் அத்தப் பூக்கோலம் போடப்பட்டது.      இதையடுத்து அத்த பகுதியில் ஊஞ்சல்கள் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். மேலும் அத்தப்பூ கோலம் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து அரண்மனை அதிகாரிகள் கூறுகையில், -  ஓணத்திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் அரண்மனையில் விதவிதமான பூக்களால் அந்தப் பூ கோலம்  போடப்படும். மேலும் செப்டம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் அரண்மனை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்கள் அரண்மனை வளாகத்தினை பார்வையிட இரவு 8.30 மணி வரை அனுமதி வழங்கப்படும் இவ்வாறு தெரிவித்தனர்.
Next Story