குமரி : ரப்பர்சீட் உலர் கூடத்தில் தீ விபத்து

குமரி : ரப்பர்சீட் உலர் கூடத்தில் தீ விபத்து
X
களியல்
குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஏராளமான தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்தின் உள் பகுதியல் அமைக்கபட்டுள்ள ரப்பர் சீட் உலர் கூடத்தில் நேற்று மாலையில் திடீரென தீ பற்றி மளமள வென பயங்கரமாக எரிய துவங்கியது. இங்கு பணியாற்றிய 10-த்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டு சம்பவத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்க ஒரு மணி நேரமாக போராடினர்.50 லட்சம் ரூபாய்க்கு மேலான பொருட்கள் தீயில் இருந்து நாசம். சம்பவயிடத்திற்கு வந்த களியல் போலீசாரும் தீ பற்ற காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Next Story